ADDED : மே 04, 2024 05:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி: போடி நகராட்சி பள்ளித் தெருவை சேர்ந்தவர் முத்துப்பாண்டி 37. இவருக்கும் போடி புதூரை சேர்ந்த மது 35. என்பவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் சம்பந்தமாக முன் விரோதம் இருந்துள்ளது.
இந்நிலையில் நேற்று முத்துப்பாண்டி காமராஜ் பஜாரில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது முத்துப்பாண்டியை மது தகாத வாத்தியால் பேசி, கையில் இருந்த சாவியால் நெற்றியில் குத்தி காயம் ஏற்படுத்தி கொலை மிரட்டல் விடுத்தார். போடி டவுன் போலீசார் மது மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.