/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பஞ்சமி நிலத்தில் வேலி அமைத்தவர் மீது வழக்கு
/
பஞ்சமி நிலத்தில் வேலி அமைத்தவர் மீது வழக்கு
ADDED : ஜூலை 21, 2024 08:13 AM

தேனி: தேனி கர்னல் ஜான்பென்னி குவிக் பஸ் ஸ்டாண்ட் அருகே 3ஏக்கர் 96 செண்ட் பஞ்சமி நிலம் உள்ளது.
இவற்றை சிலர் ஆக்கிரமித்துள்ளதால் வழக்குகள் நிலுவையில் உள்ளது.
பஞ்சமி நிலத்தில் 10 சென்ட் நிலத்தில் இரும்பு கம்பி வேலி அமைக்கும் பணியை தேனி கே.ஆர்.ஆர்., நகர் பவுன்ராஜ் மேற்கொண்டார். இந்த இடம் குறித்து டி.ஆர்.ஓ., விசாரனையில் உள்ள நிலையில் பணி மேற்கொண்டவர் மீது வி.ஏ.ஓ., ஜீவானந்தம் புகார் அளித்தார்.
தேனி போலீசார் பவுன்ராஜ் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இரும்பு கம்பிவேலியை தாசில்தார் ராணி, துணைதாசில்தார் மாரிமுத்து, வி.ஏ.ஓ., அகற்ற சென்றனர். அப்போது இரும்பு வேலி அமைத்தவர், நோட்டீஸ் வழங்கினால் தானாக அகற்றுவதாக தெரிவித்தார். இதனை தொடர்ந்து ஆக்கிரமிப்பு அகற்றாமல் அதிகாரிகள் சென்றனர்.