/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
நட்பாக பழகி நகையை அபேஸ் செய்ய முயன்ற பெண் மீது வழக்கு
/
நட்பாக பழகி நகையை அபேஸ் செய்ய முயன்ற பெண் மீது வழக்கு
நட்பாக பழகி நகையை அபேஸ் செய்ய முயன்ற பெண் மீது வழக்கு
நட்பாக பழகி நகையை அபேஸ் செய்ய முயன்ற பெண் மீது வழக்கு
ADDED : ஏப் 30, 2024 05:02 AM
போடி: போடி திருமலாபுரம் குப்பழகிரி தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் தேவகியம்மாள் 38. இவரும் தர்மபுரி அருகே கோப்பூர் பகுதியைச் சேர்ந்த முத்துமணி 35. என்பவரும் ஆன்லைன் மூலம் பேசி நட்பாக பழகி வந்துள்ளனர். நட்பின் காரணமாக தேவகியம்மாள் வீட்டிற்கு முத்துமணி கடந்த மாதம் வந்து தங்கி உள்ளார்.
தேவகியம்மாளிடம் இருந்த நான்கரை பவுன் தங்க செயினை வாங்கி முத்துமணி கழுத்தில் போட்டுள்ளார். பின் ஊருக்கு சென்று விட்டு சில நாட்கள் கழித்து நகை தருவதாக கூறி சென்றவர் நகையை தரவில்லை. நகை கேட்டும் தர மறுத்து உள்ளார். இதனால் முத்துமணி நம்பிக்கை துரோகம் செய்ததாக கூறி தேவகியம்மாள் போலீசில் புகார் செய்தார். போடி டவுன் போலீசார் முத்துமணி மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.