/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பராமரிப்பு இன்றி மூடப்பட்ட போலீஸ் உடற்பயிற்சி கூடம்
/
பராமரிப்பு இன்றி மூடப்பட்ட போலீஸ் உடற்பயிற்சி கூடம்
பராமரிப்பு இன்றி மூடப்பட்ட போலீஸ் உடற்பயிற்சி கூடம்
பராமரிப்பு இன்றி மூடப்பட்ட போலீஸ் உடற்பயிற்சி கூடம்
ADDED : ஏப் 28, 2024 04:17 AM

பெரியகுளம், : பெரியகுளம் வடகரை போலீஸ் ஸ்டேஷனில் நவீனமாக்கப்பட்ட உடற்பயிற்சி கூடம் பராமரிப்பு இன்றி மூடப்பட்டுள்ளது. இதனால் போலீசார் சங்கடத்தில் உள்ளனர்.
பெரியகுளம் சப்-டிவிஷனுக்கு  உட்பட்ட தென்கரை, வடகரை, ஜெயமங்கலம், தேவதானப்பட்டி ஆகிய நான்கு போலீஸ் ஸ்டேஷன்களில் 190 போலீசார் உள்ளனர். இதில் 20 முதல் 25 பெண் போலீசார் பணியாற்றுகின்றனர். போலீசார் தினமும் குறிப்பிட்ட நேரத்தில் உடற்பயிற்சி செய்வது சாத்தியம் இல்லாதது.
இதனால் வடகரை போலீஸ் ஸ்டேஷனில் காவல்துறை நவீன மயம் திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் உடற்பயிற்சி கூடம் 2020-ல்  துவங்கப்பட்டது.
தொப்பையை குறைக்க அப்டமின், கைகளில் மசில்ஸ், நெஞ்சு விரிவுத்தன்மை அதிகரிக்க பென்ஸ் பிரஸ், கரலைக்கட்டை உட்பட 15 வகையான நவீன கருவிகள், பெல்ஜியம் கண்ணாடி பொருத்தப்பட்ட உபகரணங்கள் அமைக்கப்பட்டன.
பணிக்கு வரும்போதும் திரும்பும் போதும் போலீசார்கள் இந்த உடற்பயிற்சி கூடத்தில் உடல் திறனை வலுப்படுத்தியும் இதனால் மன வலிமை பெற்றனர். பெண் போலீசாருக்கு நேரம் ஒதுக்கப்பட்டது.
வரவேற்பு: புகை, மது மற்றும் போதை பழக்கத்திற்கு அடிமையான சில போலீசார்களுக்கு உடற்பயிற்சி கூடத்திற்கு வந்து தீய பழக்கத்தில் இருந்து விடுபட்டனர். இதற்கு செல்லும் வழியில் திருட்டு, கஞ்சா,  கடத்தல் வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான டூவீலர்கள் உடற்பயிற்சி கூடத்தை மறைத்து நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் பல மாதங்களாக உடற்பயிற்சி கூடம் திறக்கப்படாமல் மூடப்பட்டு உள்ளது. எஸ்.பி., சிவபிரசாத் உடற்பயிற்சி கூடம் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

