/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேனி தொகுதி ஓட்டு எண்ணும் மையத்தில் 300 கேமராக்கள் கட்டுப்பாட்டு அறை தயார்
/
தேனி தொகுதி ஓட்டு எண்ணும் மையத்தில் 300 கேமராக்கள் கட்டுப்பாட்டு அறை தயார்
தேனி தொகுதி ஓட்டு எண்ணும் மையத்தில் 300 கேமராக்கள் கட்டுப்பாட்டு அறை தயார்
தேனி தொகுதி ஓட்டு எண்ணும் மையத்தில் 300 கேமராக்கள் கட்டுப்பாட்டு அறை தயார்
ADDED : ஏப் 19, 2024 05:42 AM
தேனி: ஓட்டு எண்ணும் மையத்தில் 300 கேமாராக்கள் பொருத்தி கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்டுகிறது. இங்கு கட்டுப்பாட்டு அறை தயார் நிலையில் உள்ளது.
தமிழகத்தில் லோக்சபா தொகுதி தேர்தல் இன்று நடக்கிறது. தேனி லோக்சபா தொகுதியில் 6 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இன்று ஓட்டுப்பதிவு முடிந்ததும் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் கொடுவிலார்பட்டியில் உள்ள தேனி கம்மவார் சங்கம் கல்வி குழும வளாகத்திற்கு கொண்டு வரப்படுகிறது. அங்கு 6 கட்டடங்களில் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்படுகின்றன. சட்டசபை தொகுதி வாரியாக கொண்டு வரப்படும் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தொகுதிக்கான வரவேற்பு இடத்தில் பதிவு செய்து பின் பாதுகாப்பு அறைகளில் வைக்கப்படும். ஓட்டு எண்ணிக்கை மையத்தில் கண்காணிப்பு பணிக்காக 300 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பெட்டிகள் வைப்பு அறை முன்பும் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
கேமராக்களை பார்வையிடுவதற்காக கல்லுாரி வளாகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இதில் வேட்பாளர்களின் முகவர்கள், அதிகாரிகள் தினமும் பார்வையிடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தவிர தேர்தல் நடத்தும் அலுவலர், மற்ற அலுவலர்களுக்கு தனித்தனி அறைகள், தபால் ஓட்டுகள், மின்னனு தபால் ஓட்டுகள் வைப்பதற்கு தனி அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஓட்டு எண்ணிக்கைக்கு தேவையான பணிகளும் முடிக்கப்பட்டுள்ளன.
வளாகம், மைதானத்தில் கூடுதல் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் ஜூன் 4 வரை கல்லுாரி வளாகம், அதனை சுற்றி உள்ள பகுதிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது.

