/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
குடியிருப்பில் நுழைந்த மான் பூங்கா வேலியில் சிக்கி பலி
/
குடியிருப்பில் நுழைந்த மான் பூங்கா வேலியில் சிக்கி பலி
குடியிருப்பில் நுழைந்த மான் பூங்கா வேலியில் சிக்கி பலி
குடியிருப்பில் நுழைந்த மான் பூங்கா வேலியில் சிக்கி பலி
ADDED : ஆக 25, 2024 05:20 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடலுார்: குமுளி அருகே குடியிருப்பில் நுழைந்த மான் தப்பி ஓடும்போது தனியார் பூங்கா வேலியில் சிக்கி பலியானது.
கேரள மாநிலம் குமுளி அருகே பெரியாறு புலிகள் சரணாலயம் உள்ளது. வனப்பகுதியில் இருந்து வெளியேறிய மான் குடியிருப்பில் நுழைந்தது. அங்கிருந்து தப்பி ஓடும்போது தனியார் பூங்காவில் உள்ள வேலியில் சிக்கியது. அதிலிருந்து வெளியேறுவதற்காக போராடி பலியானது. மூன்று வயதுள்ள மிளா மானின் உடலை குமுளி வனத்துறையினர் மீட்டு பெரியாறு புலிகள் சரணாலயம் பகுதியில் மருத்துவ பரிசோதனைக்குப் பின் அடக்கம் செய்யப்பட்டது.