/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
குப்பையால் நிரம்பி வழியும் சாக்கடை
/
குப்பையால் நிரம்பி வழியும் சாக்கடை
ADDED : ஜூலை 06, 2024 05:51 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : தேனி அல்லிநகரம் நகராட்சி 8வது வார்டுக்கு உட்பட்ட வெங்கலா நகர் 1,2 தெருக்கள், குறிஞ்சி நகர் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இதில் வெங்கலா நகர் பகுதி வழியாக செல்லும் சாக்கடையில் குப்பை நிறைந்து அடைப்பு ஏற்படுகிறது.
இதனால் கழிவுநீர் செல்ல இயலாமல் சில இடங்களில் தேங்குகிறது. இப்பகுதியில் அங்கன்வாடி மையமும் செயல்படுகிறது. சாக்கடை கழிவு நீர் தேங்கி பொதுமக்களுக்கு நோய் தொற்றும் அபாயமும் உள்ளது.
நகராட்சி நிர்வாகம் குப்பையை அகற்றி, சாக்கடை துார்வார நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.