/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஏல விவசாயிகளின் ஓட்டுகளை கவர வலம் வரும் இடதுசாரி கூட்டணி
/
ஏல விவசாயிகளின் ஓட்டுகளை கவர வலம் வரும் இடதுசாரி கூட்டணி
ஏல விவசாயிகளின் ஓட்டுகளை கவர வலம் வரும் இடதுசாரி கூட்டணி
ஏல விவசாயிகளின் ஓட்டுகளை கவர வலம் வரும் இடதுசாரி கூட்டணி
ADDED : மார் 25, 2024 05:42 AM

கூடலுார், : லோக்சபா தேர்தலில் தமிழக ஏலத்தோட்ட தொழிலாளர்களின் ஓட்டுகளை பெற இடுக்கி இடதுசாரி கூட்டணி கட்சி நிர்வாகிகள் எல்லையை ஒட்டியுள்ள கூடலுாரில் வலம் வந்த வண்ணம் உள்ளனர்.
கேரளா இடுக்கி மாவட்டத்தில் 2 லட்சம் ஏக்கர் பரப்பளவில் ஏலத்தோட்டம் உள்ளது. கூடலுார், கம்பம், காமயகவுண்டன்பட்டியில் இருந்து ஏராளமான விவசாயிகள் ஏல விவசாயம் செய்து வருகின்றனர். மேலும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தமிழகப் பகுதியில் இருந்து தினந்தோறும் ஏலத்தோட்ட பணிக்காக சென்று திரும்புகின்றனர். பலர் இடுக்கி மாவட்டத்திலேயே தங்கி ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை பெற்றுள்ளனர்.
இடுக்கி லோக்சபா தொகுதியில் காங்கிரஸ் கூட்டணி சார்பில் சிட்டிங் எம்.பி., டீன் குரியா கோஸ் மீண்டும் வேட்பாளராக களம் இறக்கப்பட்டுள்ளார். அதேபோல் இடதுசாரி கூட்டணி சார்பில் முன்னாள் எம்.பி., ஜாய்ஸ் ஜார்ஜ் வேட்பாளராக உள்ளார். இவர் 2019ல் தோல்வியை சந்தித்ததால் தற்போது எப்படியும் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற முனைப்புடன் பல்வேறு யுக்தியை பயன்படுத்தி பிரசாரத்தை துவக்கியுள்ளனர்.
இதன் ஒரு பகுதியாக தமிழக தோட்டத் தொழிலாளர்களின் ஓட்டுகளை பெற கூடலுார், கம்பம், காமயகவுண்டன்பட்டி பகுதிகளில் கடந்த சில நாட்களாக இடது சாரி கூட்டணி கட்சி நிர்வாகிகள் காரில் வலம் வந்த வண்ணம் உள்ளனர். காங்கிரஸ் வேட்பாளர் ஏலம் மற்றும் தேயிலை தோட்டங்களில் நேரடியாக சென்று ஓட்டு கேட்டு வரும் நிலையில், தமிழக ஏல விவசாயிகளின் வீட்டுக்கே சென்று ஓட்டு கேட்கும் பணியில் இடதுசாரி கூட்டணி கட்சியினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

