/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கிணற்றில் விழுந்த கடமான் உயிருடன் மீட்பு
/
கிணற்றில் விழுந்த கடமான் உயிருடன் மீட்பு
ADDED : மே 08, 2024 04:52 AM
தேவதானப்பட்டி, : கிணற்றில் விழுந்த ஒரு வயது கடமானை தீயணைப்புத் துறையினர் உயிருடன் மீட்டனர்.
தேவதானப்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதிகளில் காட்டுமாடு, காட்டுப்பன்றி, மான்கள் உட்பட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன.
குடிநீர் தொட்டிகள் பராமரிக்கப் படாததால் வனவிலங்குகள் குடிநீருக்காக விளை நிலங்களில் சுற்றி திரிகின்றன.
இதில் அடிக்கடி காட்டுமாடு கிணற்றில் விழுகிறது. மஞ்சளாறு அணை அருகே வழுக்குப்பாறை தென்னந்தோப்பில் நேற்று முன்தினம் இரவு ஒரு வயது கடமான் தண்ணீரை தேடி 50 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து தத்தளித்தது.
தீயணைப்பு நிலைய அலுவலர் பழனி தலைமையில் வீரர்கள் கடமானை மீட்டு தேவதானப்பட்டி வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

