/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சென்டர் மீடியனில் செடிகளை நட்ட சோலைக்குள் கூடல் அமைப்பு
/
சென்டர் மீடியனில் செடிகளை நட்ட சோலைக்குள் கூடல் அமைப்பு
சென்டர் மீடியனில் செடிகளை நட்ட சோலைக்குள் கூடல் அமைப்பு
சென்டர் மீடியனில் செடிகளை நட்ட சோலைக்குள் கூடல் அமைப்பு
ADDED : ஜூலை 07, 2024 11:59 PM

கூடலுார் : கூடலுார் நகரப் பகுதியில் உள்ள சென்டர் மீடியனில் சோலைக்குள் கூடல் அமைப்பு சார்பில் செடிகள் நடவு செய்யும் பணி துவங்கியது.
கூடலுார் சோலைக்குள் கூடல் அமைப்பினர் தொடர்ந்து 359 வது வாரமாக மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடவு செய்துள்ளனர். இதில் பல இடங்களில் மரங்களாக வளர்ந்துள்ளன.
இந்நிலையில் தெற்கு மந்தை வாய்க்கால் பாலத்தில் இருந்து, வடக்கு போலீஸ் ஸ்டேஷன் வரை 4 கி.மீ., தூர நகர்ப் பகுதியில் உள்ள சென்டர் மீடியனில் அரளிச் செடிகளை நடும் பணியை துவக்கினர்.
முதற்கட்டமாக 100 செடிகள் நடப்பட்டன. தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் சென்டர் மீடியன் முழுவதும் செடிகள் நடும் பணி நடைபெற உள்ளது. நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கடந்த சில நாட்களாக சென்டர் மீடியன் குப்பை கொட்டும் இடமாக மாறியது. தற்போது செடிகள் நடும் பணியால் இப்பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என அமைப்பின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.