/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
புது பஸ் ஸ்டாண்ட் அறிவுசார் மையத்தில் போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி வகுப்பு; அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

ADDED : ஜூலை 01, 2024 06:08 AM
தேனி, : 'தேனி கர்னல் ஜான் பென்னிகுவிக் பஸ் ஸ்டாண்டில் உள்ள அறிவுசார் மையத்தில் போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்த வேண்டும்.' என, தேர்விற்கு தயாராகும் பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த அறிவுசார் மையம் தேனி அல்லிநகரம் நகராட்சியால் நிர்வகிக்கப்படுகிறது. மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம், மாவட்ட மைய நுாலகம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 2 கி.மீ., துாரத்தில் அமைந்துள்ளது. இம்மையம் அரசு விடுமுறை, வாரத்தில் வெள்ளிக்கிழமை தவிர மற்ற அனைத்து நாட்களிலும் இயங்குகிறது. இங்கு அரசுத் தேர்வுகளுக்கு தயாரகுவதற்கான புத்தகங்கள், பள்ளி பாட புத்தகங்கள், நாளிதழ்கள், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன.
மாவட்டத்தின் பிற பகுதிகளில் இருந்து எளிதாக வந்து செல்லும் வகையில் பஸ் ஸ்டாண்ட் அருகே பாதுகாப்பான, அமைதியான சூழலில் அறிவு சார் மையம் அமைந்துள்ளது. மத்திய, மாநில அரசு தேர்வுகளுக்கு தயாராகும் தேர்வர்கள், தினசரி நாளிதழ்கள் படிக்கும் வாசகர்கள் என தினமும் நுாறு பேர் வரை வருகை தருகின்றனர்.
மையம் திறக்கப்பட்டதில் இருந்து இங்குள்ள ஸ்மார்ட் வகுப்பறை இது நாள் வரை பயன்படுத்தாமல் காட்சி பொருளாக உள்ளது. இதனை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். மேலும், 'வார இறுதி நாட்களில் போட்டித் தேர்வுகளுக்கு ஒரு நாள் பயிற்சி வழங்கினால் பட்டதாரிகள், போட்டித் தேர்வர்கள் பயனடைவர்' என, அங்கு வந்த வாசகர்கள், பொது மக்கள் தெரிவித்தனர்.