/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
திருடச் சென்ற இடத்தில் துாங்கிய திருடன்
/
திருடச் சென்ற இடத்தில் துாங்கிய திருடன்
ADDED : ஜூலை 22, 2024 07:31 AM

தேனி: தேனியில் மளிகை கடையில் திருட சென்ற இடத்திலேயே இரவு முழுவதும் துாங்கிய பவர்ஹவுஸ் தெரு விஸ்வநாத்தை 23, போலீசார் கைது செய்தனர்.தேனி பங்களாமேடு டி.பி., தெரு ராஜேந்திரன் 61. இவர் வீட்டின் அருகே மளிகை கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு கடையில் வியாபாரத்தை முடித்து இரவு 10:00 மணிக்கு பூட்டினார். நேற்று காலை 5:00 மணிக்கு கடையை திறந்த போது, கடையின் உள்ளே விஸ்வநாத் துாங்கிக் கொண்டிருந்தார். கடையின் மேற்கூரை சேதமடைந்திருந்தது.
மளிகை கடையில் திருட வந்த இடத்தில் விஸ்வநாத் துாங்கியது தெரிந்தது. அருகில் இருந்தவர்கள் உதவியுடன் தேனி போலீசில் ஒப்படைத்தார். போலீசார் கைது செய்தனர். இவர் மீது பெரியகுளம், தென்கரை போலீஸ் ஸ்டேஷன்களில் திருட்டு வழக்குகள் உள்ளன.