ADDED : மே 28, 2024 03:49 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி, : தேனி நகராட்சி கே.ஆர்.ஆர்., நகர் இறக்கத்தில் ரோட்டின் ஓரத்தில் புங்கை மரம் அடர்ந்து வளர்ந்துள்ளது. நேற்று மதியம் வீசிய பலத்த காற்றால் மரத்தின் கிளைகள் ஒடிந்து நடுரோட்டில் விழுந்தது.
இதனால் புது பஸ் ஸ்டாண்டில் இருந்து நகருக்குள் வரும் வாகனங்கள் சிவாஜி நகர் பகுதியிலும், நகருக்குள் இருந்து பஸ் ஸ்டாண்ட் செல்லும் வாகனங்கள் கே.ஆர்.ஆர்., நகர் மேடான பகுதியில் நின்று போக்குவரத்து ஸ்தம்பித்தது. பின் தகவல் அறிந்த நகராட்சி உதவி பொறியாளர் முருகேசன் முன்னிலையில் ஊழியர்கள் மரக்கிளைகளை வெட்டி அகற்றிய பின், போக்குவரத்து சீரானது.