/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பள்ளி மாணவர்கள் சென்ற வேன் மரத்தில் மோதி 4 பேர் காயம்
/
பள்ளி மாணவர்கள் சென்ற வேன் மரத்தில் மோதி 4 பேர் காயம்
பள்ளி மாணவர்கள் சென்ற வேன் மரத்தில் மோதி 4 பேர் காயம்
பள்ளி மாணவர்கள் சென்ற வேன் மரத்தில் மோதி 4 பேர் காயம்
ADDED : ஜூலை 04, 2024 02:00 AM
கடமலைக்குண்டு: கடமலைக்குண்டு அருகே பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற மினி வேன் டயர் வெடித்து மரத்தில் மோதியதில் டிரைவர் உட்பட 4 பேர் காயமடைந்தனர்.
வருஷநாடு பகுதியைச் சேர்ந்தவர் அருண் பாண்டி 26, முறுக்கோடையில் இருந்து தினமும் மயிலாடும்பாறையில் உள்ள தனியார் மேல்நிலைபள்ளிக்கு மாணவ மாணவிகளை ஏற்றிச்செல்வது வழக்கம்.
நேற்று காலை வழக்கம் போல் வேனில் மாணவ மாணவிகளுடன் சென்றார். தர்மராஜபுரம் அருகே சென்ற போது வேனின் முன்பக்க டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்து ரோட்டின் ஓரத்தில் இருந்த தென்னை மரத்தில் மோதியது.
இதில் வேன் டிரைவர் அருண்பாண்டியன், வருஷநாடு பவள நகரை சேர்ந்த மாணவி அகஸ்தியா 15, தும்மக்குண்டு அஸ்வின் 15, வருஷநாடு வைகை நகர் மவுனியா 15 ஆகியோர் காயம் அடைந்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.
விபத்து குறித்து கடமலைக்குண்டு போலீசார் விசாரிக்கின்றனர்.