/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
துணி துவைக்கச்சென்ற பெண் நீரில் மூழ்கி பலி
/
துணி துவைக்கச்சென்ற பெண் நீரில் மூழ்கி பலி
ADDED : ஜூலை 09, 2024 05:39 AM
கடமலைக்குண்டு: கண்டமனூரை சேர்ந்தவர் சஞ்சீவி மனைவி சரோஜா 63, நேற்று முன் தினம் துணி துவைப்பதற்காக கண்டனூர் துணை மின் நிலையத்திற்கு எதிரே ஆனைக்கட்டி பாறையில் உள்ள பயன்பாடில்லாத கல்குவாரிக்கு சென்றார். எதிர்பாராத விதமாக 6 அடி ஆழமுள்ள பள்ளத்தில் விழுந்தார்.
அருகில் யாரும் இல்லாததால் சிறிது நேரத்தில் சரோஜா நீரில் மூழ்கி இறந்தார். நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால் அவரது மகன் பழனி முருகன் ஆனைக்கட்டி பாறைக்கு சென்று பார்த்துள்ளார்.
அப்போது நீர்த்தேக்கம் அருகே செருப்பு மற்றும் துணிகள் மட்டும் இருந்துள்ளது அதனால் சந்தேகம் அடைந்த அவர் கடமலைக்குண்டு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
தீயணைப்பு துறையினர் நீரில் மூழ்கி இருந்த சரோஜாவின் உடலை மீட்டனர். கண்டமனூர் போலீசார் சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.