/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பெற்றோரை தேடி வயநாடு சென்ற பீஹார் தொழிலாளி
/
பெற்றோரை தேடி வயநாடு சென்ற பீஹார் தொழிலாளி
ADDED : ஆக 03, 2024 05:27 AM

மூணாறு: மூணாறில் தேயிலை தோட்டத்தில் வேலை செய்யும் பீஹாரைச் சேர்ந்த தொழிலாளி பெற்றோர், சகோதரர்கள் ஆகியோரை தேடி வயநாடு சூரல் மலைக்கு சென்றார்.
மூணாறு அருகே கே.டி.எச்.பி. கம்பெனிக்குச் சொந்தமான செண்டு வாரை எஸ்டேட்டில் பீஹாரைச் சேர்ந்த ரவிரோஷன்குமார் 22, அவரது மனைவி ஆகியோர் தொழிலாளர்களாக வேலை செய்து வருகின்றனர்.
ரவிரோஷன்குமாரின் பெற்றோர், சகோதரர்கள் ஆகியோர் வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட சூரல்மலையில் வசித்தனர். அங்குள்ள டீக்கடையில் தந்தை உபேந்திரபாஸ்வான் வேலை செய்து வந்த நிலையில் தாயார் புலுக்காமபிதேவி தேயிலை பாக்டரியில் வேலை செய்தார். பெற்றோர் தினமும் மாலை ரவிரோஷன்குமாரை அலைபேசியில் தொடர்பு கொண்டு வந்தனர். ஆனால் வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட பிறகு பெற்றோர்கள், சகோதரர்கள் ஆகியோர் குறித்து எவ்வித தகவலும் இல்லாத நிலையில் அவர்களை அலைபேசியில் தொடர்பு கொள்ளவும் இயலவில்லை. சூரல்மலை உள்ள பீஹாரைச் சேர்ந்த தொழிலாளர்களை ரவிரோஷன்குமார் தொடர்பு கொண்ட போதும் பெற்றோர் குறித்து எவ்வித தகவலும் கிடைக்கவில்லை. அதனால் அவர்களை தேடி ரவிரோஷன்குமார், மனைவியுடன் வயநாடு சூரல்மலைக்குச் சென்றார்.