ADDED : ஆக 01, 2024 05:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி நாடார் சரஸ்வதி கலை, அறிவியல் கல்லுாரியில் என்.எஸ்.எஸ்., சார்பில் ஆதார் அட்டை திருத்தம் செய்தல் முகாம் நடந்தது.
முகாமிற்கு உறவின்முறை தலைவர் ராஜமோகன் தலைமை வகித்தார்.
துணைத்தலைவர் கணேஷ், பொதுச்செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன் முன்னிலை வகித்தனர். கல்லுாரி செயலாளர் காசிபிரபு, இணைச்செயலாளர்கள் அருண், செண்பகராஜன், கல்லுாரி முதல்வர் சித்ரா பேசினர். தபால் அலுவலக உதவியாளர்கள் குமரேசன், சரவணகுமார் ஆதார் முக்கியத்துவம், திருத்தம் பற்றி பேசினர்.
தொடர்ந்து மாணவிகளுக்கு ஆதார் புதுப்பித்தல், முகவரி, அலைபேசி எண், மெயில் ஐ.டி., மாற்றம் செய்யப்பட்டது. துணை முதல்வர்கள், என்.எஸ்.எஸ்., அலுவலர்கள் முகாமை ஒருங்கிணைத்தனர்.