/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
இரட்டை இலைக்கு ஆக்சிஜன் கொடுத்து மீட்டெடுக்க வேண்டும் அ.ம.மு.க., வேட்பாளர் தினகரன் பிரசாரம்
/
இரட்டை இலைக்கு ஆக்சிஜன் கொடுத்து மீட்டெடுக்க வேண்டும் அ.ம.மு.க., வேட்பாளர் தினகரன் பிரசாரம்
இரட்டை இலைக்கு ஆக்சிஜன் கொடுத்து மீட்டெடுக்க வேண்டும் அ.ம.மு.க., வேட்பாளர் தினகரன் பிரசாரம்
இரட்டை இலைக்கு ஆக்சிஜன் கொடுத்து மீட்டெடுக்க வேண்டும் அ.ம.மு.க., வேட்பாளர் தினகரன் பிரசாரம்
ADDED : ஏப் 07, 2024 05:17 AM
சின்னமனூர், : 'இரட்டை இலைக்கு ஆக்சிஜன் கொடுத்து மீட்டெடுத்து தொண்டர்களின் கைகளில் ஒப்படைக்க வேண்டிய கடமை உள்ளது, என அ.ம.மு.க., வேட்பாளர் தினகரன் பேசினார்.
தேனி லோக்சபா தொகுதி அ.ம.மு.க. வேட்பாளர் தினகரன் சின்னமனூர் அருகே உள்ள முத்துலாபுரம், சின்ன ஓவுலாபுரம் உள்ளிட்ட பல கிராமங்களில் தினகரன் பிரசாரம் செய்து பேசியதாவது:முன்னாள் அமைச்சர்கள் மீதுள்ள வழக்குகள், கொடநாடு கொலை வழக்கிற்கு பயந்து அ.தி.மு.க., தி.மு.க., விற்கு உதவி வருகிறது. ஜெயலலிதாவை நாங்கள் எல்லோரும் சேர்ந்து கொன்றதாக கொலைப் பழி கூறினார்கள். ஆனால் ஆர்.கே. நகர் மக்கள் எல்லா பழிகளையும் துடைத்தெறிந்து எனக்கு வெற்றியை தந்தனர். இப்போது இரட்டை இலையை துரோக கும்பல் தூக்கி வருகிறது. எம்.ஜி.ஆர். சின்னம் பி.எஸ். வீரப்பா, நம்பியார் கைகளில் இருந்தால் நீங்கள் நம்புவீர்களா. அதைப் போலத் தான் இவர்களும். இரட்டை இலை சின்னம் மிக பலவீனமாக படுக்கையில் உள்ளது. அதை மீட்டெடுத்து ஆக்சிஜன் கொடுத்து தொண்டர்களின் கைகளில் ஒப்படைக்க வேண்டியது எனது கடமை.
ஓ.பி.எஸ். அவர்கள் தேனி தொகுதியை எனக்காக விட்டுக் கொடுத்து விட்டு, தைரியமாக ராமநாதபுரத்தில் போட்டியிடுகிறார். சேலத்து சிங்கம் பழனிச்சாமிக்கு தைரியமிருந்தால் - சேலத்தில் போட்டியிட வேண்டியது தானே. இங்கு போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் தோல்வியின் விளிம்பில் நின்று ஏதேதோ பேசி வருகிறார். அவரிடம் உங்கள் பிரதமர் வேட்பாளர் யார் என கேளுங்கள். ஜெ., யின் கட்டளைக்காக ஒதுங்கியிருந்தேன். இனி தேனியிலிருந்து என்னை பிரிக்க முடியாது. இனி நான் இங்கேயே தான் இருப்பேன். எந்த கொம்பனாலும் என்னை தேனியிலிருந்து பிரிக்க முடியாது. இங்கு அடிக்கும் குக்கர் விசில் சத்தம் 40 தொகுதிகளிலும் அடிக்க வேண்டும். இவ்வாறு பேசினார்.

