/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
நேரு சிலை சிக்னலில் விபத்து பள்ளங்கள்
/
நேரு சிலை சிக்னலில் விபத்து பள்ளங்கள்
ADDED : ஏப் 18, 2024 06:10 AM

தேனி: தேனி நேருசிலை சிக்னல் மாநில, தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் முக்கிய பகுதியாகும். தேனி நகரில் வாகன போக்குவரத்து அதிகம் உள்ள இடமாகும். இந்த இடத்தில் மதுரை, கம்பம், பெரியகுளம் ரோடுகள் இணைகின்றன. இதில் கம்பத்தில் இருந்து மதுரை செல்லும் ரோட்டில் சிக்னல் அருகே பெரிய பள்ளம் உள்ளது. இவ்வழியாக இயக்கப்படும் டூவீலர்களில் பலர் பள்ளத்தில் விழுந்து தடுமாறி செல்வது தொடர்கிறது.
சில நேரங்களில் விழுந்து காயமடைவதும் தொடர்கிறது. நெடுஞ்சாலைத்துறையினர் பள்ளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதே போல் நேரு சிலைக்கு பின்புரம் உள்ள பெரிய அளவிலான சாக்கடை பள்ளத்தில் பொருத்தப்பட்டுள்ள இரும்பு குழாய்களும் சேதமடைந்து காணப்படுகிறது. இதில் யாரேனும் விழுந்து விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. இதனால் அந்த பள்ளங்களில் அமைக்கப்பட்டுள்ள மூடியை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

