/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
டூவீலர்களில் விதிமீறி மூன்று நபர்கள் பயணிப்பது தொடர்ந்து அதிகரிப்பு பள்ளி மாணவர்களால் விபத்து அபாயம்

ADDED : ஏப் 24, 2024 06:13 AM

தேனி : மாவட்டத்தில் டூவீலர்களில் மூன்று பேர் பயணிப்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும் பள்ளி மாணவர்கள் ஓட்டிச் செல்வதால் விபத்து அபாயம் உள்ளது. இதனை போலீசார் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாவட்டத்தில் தற்போது டூவீலர் பயன்பாடு அதிகரித்துள்ளது. பல இடங்களில் பொது போக்குவரத்திற்கு ஆட்டோக்கள், பஸ்கள் இருந்தாலும் பலர் இதனை பயன்படுத்தாமல் டூவீலர்களில் குடும்பத்துடன் பயணிக்கின்றனர். அதிலும் 3, 4 பேர் பயணிப்பது அதிகரித்துள்ளது. மாவட்டம் முழுவதும் பல இடங்களில் திருவிழாக்கள் நடந்து வருவதால் அதற்கு செல்வோரில் பலர் டூவீலரில் 3 பேர் செல்கின்றனர். குடும்பத்துடன் செல்வதால் போலீசாரும் இதனை கண்டு கொள்ளாமல் உள்ளனர்.
விபத்துகள் ஏற்படும் போது குடும்பத்தில் உள்ள அனைவரும் பாதிக்கப்படுவது தவிர்க்கவே முடியாது.
அதே போல் பள்ளி தேர்வுகள் முடிந்து விட்டதால், மாணவர்கள் பலர் உறவினர்களின் வாகனங்களை ஓட்டுவதில் கவனம் செலுத்துகின்றனர். இதில் பலர் போதிய பயிற்சி இன்றி டூவீலர்களை ஓட்டுகின்றனர். இதனால் மாவட்டத்தில் ஆங்காங்கே விபத்துக்கள் தொடர்கின்றன.
போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தி பள்ளி மாணவர்கள் டூவீலர் ஓட்டி விபத்துகள் ஏற்படுவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.