/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேர்தல் பணியில் சிறுவர்களை பயன்படுத்தினால் நடவடிக்கை
/
தேர்தல் பணியில் சிறுவர்களை பயன்படுத்தினால் நடவடிக்கை
தேர்தல் பணியில் சிறுவர்களை பயன்படுத்தினால் நடவடிக்கை
தேர்தல் பணியில் சிறுவர்களை பயன்படுத்தினால் நடவடிக்கை
ADDED : ஏப் 11, 2024 06:34 AM
போடி : தேர்தல் பணியில் சிறுவர்களை ஈடுபடுத்தினால் குழந்தை தொழிலாளர்கள் சட்டத்தின் கீழ் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
ஓட்டுச் சாவடிகளுக்கு கொண்டு செல்லப்படும் பேனா, பென்சில், பேப்பர் உள்ளிட்ட மூலப் பொருட்களை பேக்கிங் செய்வது, ஓட்டுப் பதிவுக்கான இயந்திரங்களை வாகனங்களில் கொண்டு செல்லும் போது உதவிக்கு சிறுவர்களை பயன்படுத்த கூடாது. சிறுவர்களை பயன்படுத்தாத வகையில் தேர்தல் அதிகாரிகள் கவனித்துக் கொள்ள வேண்டும். மீறி குழந்தை தொழிலாளர்களை பயன்படுத்தியது தெரிய வந்தால் சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரி மீது வழக்கு பதிவு செய்து உரிய தண்டனை வழங்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். என தேர்தல் கமிஷன் உத்தரவு பிறப்பித்துள்ளது.