/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
'அம்ரூத்' பணிகள் விரைந்து முடிக்க நடவடிக்கை தேவை
/
'அம்ரூத்' பணிகள் விரைந்து முடிக்க நடவடிக்கை தேவை
ADDED : ஆக 17, 2024 01:26 AM
உத்தமபாளையம் : உத்தமபாளையத்தில் 'அம்ரூத்' திட்டத்தின் கீழ் ரூ.29.60 கோடி நிதி ஒதுக்கீடு செய்து நடைபெற்று வரும்  பணிகளை விரைந்து முடிக்க  அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உத்தமபாளையம் பேரூராட்சியில்  உள்ள 18 வார்டுகளில்  32 ஆயிரம்  மக்கள்   உள்ளனர். 4500 குடிநீர் இணைப்புகள்,    10.70 லட்சம் கொள்ளவு கொண்ட 7 குடிநீர் மேல்நிலைத் தொட்டிகளும்  உள்ளன.
இருந்த போதும்   மக்கள் தொகை பெருக்கம், குடிநீர் தேவை அதிகரிப்பு காரணங்களால் குடிநீர் அபிவிருத்தி பணிகள் செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது.
இதற்கென அம்ருத் 2.0. திட்டத்தின் கீழ் ரூ.29.60 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  இந்த பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த ஆண்டு துவங்கியது.
குடிநீர் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் முல்லைப்பெரியாற்றில் புதிய உறைகிணறு அமைப்பது,  11,503 மீ.,நீளத்திற்கு மெயின் பகிர்மான குழாய் பதிப்பது,  குடிநீர் வினியோக பைப் லைன் 60,668 மீட்டர் நீளத்திற்குஅமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. திட்டத்தில் 25.20 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 13 குடிநீர் மேல்நிலைத் தொட்டிகள் கட்டப்பட உள்ளது.
இதன் மூலம் புதிதாக 5586 புதிய குடிநீர் இணைப்புகள் வழங்க பேரூராட்சி முடிவு செய்துள்ளது.
ஆனால் பணிகள்  ஆமை வேகத்தில் நடந்து வருகிறது.
இப் பணி நிறைவு பெறாததால் அரசிடம் இருந்து வேறு பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு பெற முடியாத அவல நிலை உள்ளது. எனவே, பணிகளை விரைந்து முடிக்க பேரூராட்சி நிர்வாகம்  நடவடிக்கை எடுக்க வேண்டும்.

