/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை

ADDED : செப் 07, 2024 06:43 AM
கம்பம் : தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த கேமராக்கள் பொருத்துவது, அறிவிப்பு பலகைகள் வைப்பது போன்ற நடவடிக்கைகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மேற்கொள்ள வேண்டும்.
திண்டுக்கல் முதல் குமுளி வரை மாநில நெடுஞ்சாலைத் துறை வசம் இருந்த 170 கி.மீ. நீளமுள்ள ரோட்டை, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கையகப்படுத்தி இருவழிச்சாலையாக மாற்றி உள்ளது. தற்போது நான்கு வழிச்சாலையாக மாற்ற முடிவு செய்துள்ளது.
இருவழிச்சாலையில் வத்தலக்குண்டு, தேவதானப்பட்டி , பெரியகுளம் , தேனி, வீரபாண்டி , சின்னமனூர் உத்தமபாளையம், கம்பம், கூடலூர் என பல ஊர்களில் பைபாஸ் சாலைகளை அமைத்துள்ளது.
இதனால் வாகனங்களில் செல்வோர் அதிவேகத்தில் செல்கின்றனர். தினமும் விபத்துக்கள் நடக்கிறது.. பலர் உயிரிழக்கின்றனர். எனவே வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த பைபாஸ் மற்றும் முக்கிய சந்திப்புக்களில் கேமரா பொருத்துவது, வேகத்தை குறைந்து செல்ல வலியுறுத்தும் விளம்பர பலகைகள் அமைத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் - மேற்கொள்ள பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.