/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சர்வீஸ் ரோட்டை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை தேவை
/
சர்வீஸ் ரோட்டை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை தேவை
சர்வீஸ் ரோட்டை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை தேவை
சர்வீஸ் ரோட்டை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை தேவை
ADDED : ஆக 09, 2024 12:29 AM

தேனி: தேனியில் ரயில்வே மேம்பால பணிக்காக தெற்கு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சர்வீஸ் ரோட்டை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொச்சி- தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் தேனி நகர்பகுதியில் ரயில்வே மேம்பால பணிகள் நடந்து வருகிறது. அரண்மனைப்புதுார் விலக்கு பகுதியில் மேம்பால பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்காக பாலத்தின் இரு பகுதியிலும் சர்வீஸ் ரோடு அமைக்கப்பட்டுள்ளது. அதில் வடக்கு பகுதி ரோட்டை மட்டும் வாகனங்கள் பயன்படுத்தி வருகின்றன. பாலம் துவங்கும் இடத்தில் மட்டும் கற்கள் சிதறி உள்ளதால் வாகனங்கள் செல்வதில் தடுமாற்றம் தொடர்கிறது.
அதே நேரத்தில் மேம்பாலத்திற்கு தெற்கு பகுதியில் அமைக்கப்பட்ட சர்வீஸ் ரோடு அரைகுறையாக நிற்கிறது. அங்கு ரோடு அமைக்க மின்கம்பம் இடையூராக உள்ளது. இதனை வேறு பகுதியில் மாற்றி அமைத்து தெற்கு பகுதியில் சர்வீஸ் ரோட்டையும் பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.