/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வெட்டிய மர கழிவுகளை அகற்ற நடவடிக்கை தேவை
/
வெட்டிய மர கழிவுகளை அகற்ற நடவடிக்கை தேவை
ADDED : ஆக 04, 2024 06:14 AM

தேனி : தேனியில் பெரியகுளம் ரோட்டில் வெட்டி அகற்றப்படும் புளிய மரத்தின் குச்சிகளை குப்பையாக பல இடங்களில் குவிந்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. இவற்றை உடனே அகற்ற வேண்டும்.
தேனி பெரியகுளம் ரோட்டில் போக்குவரத்திற்கு இடையூராக இருந்த 23 புளிய மரங்கள் மாநில நெடுஞ்சாலைத்துறையால் ஏலம் விடப்பட்டது.
இம் மரங்கள் வெட்டி அகற்றும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. மரத்தின் பெரிய கட்டைகள், கிளைகளை வெட்டுபவர்கள் அவற்றை உடனே டிராக்டரில் ஏற்றி செல்கின்றனர். ஆனால் சிறிய அளவிலான குச்சிகள், இலைகளுடன் வெட்டப்பட்ட இடங்களிலேயே குப்பையாக பல இடங்களில் கிடக்கின்றன. இதனை அகற்றாததால் சில நடந்து செல்ல கூட இடமின்றி சிரமம் அடைகின்றனர்.மரத்தினை வெட்டி அகற்றுபவர்கள் இலைகள், சிறுகுச்சிகளை குப்பையாக விட்டு செல்கின்றனர். இடங்களில் கடைக்காரர்கள் மரகழிவுகளை அகற்ற கூறினால் வெட்டுபவர்கள் கண்டு கொள்ளாமல் செல்கின்றனர். நகராட்சியில் தெரிவித்தால், மரம் வெட்டுபவர்கள் சுத்தம் செய்வார்கள் என கூறுகின்றனர். இதனால் பொதுமக்கள் வியாபாரிகள் பாதிப்பிற்கு உள்ளாகுகின்றனர்.