/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
குடிநீர் ஒதுக்கீடு அளவின் படி வழங்க நடவடிக்கை தேவை டி.சுப்புலாபுரத்தில் 15 நாட்களுக்கு ஒரு சப்ளை
/
குடிநீர் ஒதுக்கீடு அளவின் படி வழங்க நடவடிக்கை தேவை டி.சுப்புலாபுரத்தில் 15 நாட்களுக்கு ஒரு சப்ளை
குடிநீர் ஒதுக்கீடு அளவின் படி வழங்க நடவடிக்கை தேவை டி.சுப்புலாபுரத்தில் 15 நாட்களுக்கு ஒரு சப்ளை
குடிநீர் ஒதுக்கீடு அளவின் படி வழங்க நடவடிக்கை தேவை டி.சுப்புலாபுரத்தில் 15 நாட்களுக்கு ஒரு சப்ளை
ADDED : மே 04, 2024 05:58 AM
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி ஒன்றியம் டி.சுப்புலாபுரம் ஊராட்சிக்கு ஆண்டிபட்டி --- சேடபட்டி கூட்டு குடிநீர் திட்டத்தில் குடிநீர் வினியோகம் உள்ளது. வைகை அணை பிக்கப் அணையில் பம்பிங் செய்து சுத்திகரிப்புக்கு பின் சக்கம்பட்டி உள்ள மேல்நிலைத் தொட்டியில் ஏற்றி பின் அங்கிருந்து திம்மரசநாயக்கனூர் தரைமட்ட தொட்டியில் சேகரிக்கப்படுகிறது. பின்னர் அங்கிருந்து மீண்டும் பம்ப் செய்யப்பட்டு டி.சுப்புலாபுரம் ஊராட்சியில் உள்ள கிராமங்களுக்கு அனுப்பப்படுகிறது. கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் கிடைக்கும் நீர் ஊராட்சிக்கு போதுமானதாக இல்லை. தற்போது கோடையில் குடிநீர் தேவை பல மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் ஊராட்சியில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது.
ஒரு லட்சம் லிட்டர் நீர் குறைத்து வினியோகம்:
ஊராட்சி நிர்வாகத்தினர் கூறியதாவது: டி.சுப்புலாபுரம் ஊராட்சிக்கு தினமும் 2.55 லட்சம் லிட்டர் குடிநீர் ஒதுக்கீடு உள்ளது. 2011 மக்கள்தொகை அடிப்படையில் இந்த ஒதுக்கீடு உள்ளது. ஒதுக்கீடு அளவு முழுமையாக கிடைப்பது இல்லை. தினமும் ஒரு 1.50 லட்சத்து லிட்டர் அளவு மட்டுமே கிடைக்கிறது. இந்த நீரை ஊராட்சியின் அனைத்து பகுதிகளுக்கும் பிரித்து வழங்க முடியவில்லை. முன்பு வாரம் ஒரு முறை கூட்டுக் குடிநீர் திட்டத்தில் வழங்கப்பட்ட குடிநீர் தற்போது 15 நாளுக்கு ஒருமுறை மட்டுமே வழங்க முடிகிறது. ஊராட்சி நிர்வாகம் மூலம் உள்ளூரில் உள்ள போர்வெல், பொதுக்கிணறுகளில் கிடைக்கும் நீரில் உப்புச்சுவை அதிகம் இருப்பதால் குடிப்பதற்கும், சமையலுக்கும் பயன்படுத்த முடியவில்லை. ஆண்டிபட்டி - சேடப்பட்டி கூட்டு குடிநீர் திட்டத்தில் டி.சுப்புலாபுரம் ஊராட்சிக்கு தினமும் ஒதுக்கப்பட்ட அளவான 2.55 லட்சம் லிட்டர் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போதுள்ள மக்கள் தொகை அடிப்படையில் இந்த அளவை உயர்த்தி வழங்க குடிநீர் வாரியம் ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரியுள்ளனர்.