ADDED : மார் 15, 2025 06:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: ஆண்டிபட்டி தாலுகா கண்டமனுாரில் வேளாண் பல்கலை, பெரியகுளம் தோட்டக்கலை கல்லுாரி , புது டெல்லி வேளாண் ஆராய்ச்சி நிலையம் சார்பில் பயிர்களில் ஒருங்கிணைந்த பூச்சி, நோய் மேலாண்மை பற்றி கருத்தரங்கு நடந்தது.
கருத்தரங்கில் விவசாயிகளுக்கு வயலில் நேரடி செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. அப்போது ஒட்டு பசை பொறி, விளக்கு பொறிகளை பயன்படுத்தி எவ்வாறு பூச்சிகளை கட்டுப்படுத்துவது, பூச்சிகளை கட்டுப்படுத்தும் வேலிப்பயிர்கள், உயிரியல் காரணிகளை கொண்டு பூச்சிகளை கட்டுப்படுத்துவது பற்றி விளக்கம் அளிக்கப்பட்டது. பேராசிரியர்கள் சுகன்யா, பிரபு, அழகர் பங்கேற்றனர். பணி அனுபவ திட்டத்தின் கீழ் மாணவர்கள் பாலாஜி, பரணிதரன், பாரதிசங்கர், பூபாலன், சாருதத், தானேஷ்வரன், தினேஷ், ஜெகன்ராஜ், ஜெனின் உள்ளிட்டோர் கருத்தரங்க ஏற்பாடுகளை செய்தனர்.