/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேக்கடி துவக்கப்பள்ளியை மேம்படுத்த நடவடிக்கை
/
தேக்கடி துவக்கப்பள்ளியை மேம்படுத்த நடவடிக்கை
ADDED : ஆக 23, 2024 05:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: கேரள மாநிலம், தேக்கடியில் கம்பம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி செயல்படுகிறது.
குமுளி, அதன் சுற்றுப்புறங்களில் வேலைக்காக தங்கியுள்ள தமிழர்களின் குழந்தைகள் படிக்கின்றனர்.
இந்த பள்ளியில் தமிழக அரசின் அனைத்து திட்டங்களும் செயல்படுத்தப்படுகிறது. பள்ளிக்கட்டடம் சேதமடைந்து இருந்தது. இப்பள்ளியை புணரமைத்து மேம்படுத்த கலெக்டர் ஷஜீவனா உத்தரவிட்டார்.
இதற்கான பணிகளை கல்வித்துறை அதிகாரிகள் துவங்கி உள்ளனர். இப்பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்கவும் ஆலோசனை செய்யப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

