/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
உயிராக உழைத்த இரட்டை இலையை இன்று எதிர்க்க வேண்டிய துர்பாக்கியம் நடிகை சி.ஆர்.,சரஸ்வதி வேதனை

ADDED : ஏப் 04, 2024 11:50 PM
போடி : ' உயிராக உழைத்த இரட்டை இலையை இன்று எதிர்க்க வேண்டிய துர்பாக்கியம் ஏற்பட்டுள்ளது' என போடியில் அ.ம.மு.க., வேட்பாளர் தினகரனை ஆதரித்து நடிகை சி.ஆர்.சரஸ்வதி பேசினார்.
போடியில் அவர் பேசியதாவது: ஜெயலலிதாவுக்கு அரசியலில் அங்கீகாரம், பிள்ளையார் சுழி போட்டது போடி. இங்கு ஓ.பி.எஸ்., 2 முறை வெற்றி பெற்றார். ஜெயலலிதா, தினகரன் இம் மாவட்டத்தில் போட்டியிட்ட போதும் இரட்டை இலையை மூச்சுக்கு 300 முறை கூறி பிரச்சாரம் செய்தோம். பழனிச்சாமியை முதல்வராக உருவாக்கிய சசிகலா, தினகரன், ஆட்சி நடத்த ஒத்துழைப்பு கொடுத்த ஓ.பி.எஸ்.,ற்கும், பக்க பலமாக இருந்த பா.ஜ., வுக்கும் பழனிச்சாமி துரோகம் செய்துள்ளார்.
கஷ்டப்பட்டு உருவான அ.தி.மு.க., இரட்டை இலை சின்னம் ஒற்றுமையாக இருந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும். தனித்தனியாக பிரிந்து செயல்பட்டால் தி.மு.க.,விற்கு தான் லாபம். அ.தி.மு.க., ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என பா.ஜ., தலைவர்கள் பேசினார்கள். ஒன்றாக இணைந்தால் போதும் என்பதற்காக தினகரன் சீட் கேட்க மறுத்தார். துரோகிகள் கையில் உள்ள இரட்டை இலையை மீட்க போராடி வருகிறோம்.
அ.தி.மு.க., விற்காக உயிர் கொடுத்து உழைத்தோம். இரட்டை இலையை உயிர் மூச்சாய் நினைத்தோம். இன்று பழனிசாமியால் 'இரட்டை இலை ' யை எதிர்க்க வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளோம். நினைக்கவே வேதனையாக உள்ளது என பேசினார்.