/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஆண்டிபட்டி பஸ் ஸ்டாண்டில் கூடுதல் இருக்கை வசதி தேவை
/
ஆண்டிபட்டி பஸ் ஸ்டாண்டில் கூடுதல் இருக்கை வசதி தேவை
ஆண்டிபட்டி பஸ் ஸ்டாண்டில் கூடுதல் இருக்கை வசதி தேவை
ஆண்டிபட்டி பஸ் ஸ்டாண்டில் கூடுதல் இருக்கை வசதி தேவை
ADDED : ஏப் 28, 2024 04:11 AM
ஆண்டிபட்டி : ஆண்டிப்பட்டி பஸ் ஸ்டாண்டில் பயணிகளுக்கு போதுமான இருக்கை வசதி இல்லாததால் அசுத்தமான தரையில் அமரும் நிலை உள்ளது.
இப்பஸ் ஸ்டாண்டில் தினமும் ஆண்டிபட்டி பகுதியில் உள்ள 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வந்து செல்கின்றனர். உசிலம்பட்டி, பெரியகுளம், போடி, தேனி, வத்தலகுண்டு உள்ளிட்ட வெளியூர்களில் இருந்தும் டவுன் பஸ்களில் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். பஸ் ஸ்டாண்டில் பஸ்சுக்கு காத்திருக்கும் பயணிகளுக்கு போதுமான இருக்கை வசதி இல்லை. தற்போதுள்ள நிரந்தர சிமென்ட் இருக்கைகளில் டைல்ஸ் கற்கள் பதிக்கப்பட்டு வருகிறது. பொது மக்களுக்கான நடைபாதையை ஆக்கிரமிப்பு கடைகள் அமைத்துள்ளனர். இருக்கை வசதி இல்லாததால் நிற்க முடியாத பயணிகள் பஸ் ஸ்டாண்டில் அசுத்தமான தரையில் அமர்ந்து பஸ்ஸூக்கு காத்திருக்கின்றனர். கூடுதல் இருக்கை வசதிக்கு ஆண்டிபட்டி பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

