/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கூடலுாரில் நிர்வாகிகள் சுறுசுறுப்பு
/
கூடலுாரில் நிர்வாகிகள் சுறுசுறுப்பு
ADDED : மார் 23, 2024 06:17 AM
கூடலுார்: கூடலுாருக்கு அ.தி.மு.க., வேட்பாளர் நாராயணசாமி வந்ததை தொடர்ந்து நிர்வாகிகள் சுறுசுறுப்படைந்துள்ளனர்.
தேனி லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜ., இடையே மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.
அ.தி.மு.க., வேட்பாளர் நாராயணசாமி கூடலுாருக்கு நேற்று வந்தார். இதுவரை மற்ற கட்சி வேட்பாளர்கள் வராத நிலையில் முதன் முதலாக ஆண்டிபட்டி தொகுதியில் உள்ள ஒரே நகராட்சியான கூடலுாருக்கு வந்ததால் நிர்வாகிகளும், தொண்டர்களும் உற்சாகமடைந்துள்ளனர். நகரச் செயலாளர் அருண்குமாரை சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டார்.
அவைத்தலைவர் நடராஜன், துணைச் செயலாளர் பாலைராஜா, ஜெ., பேரவை மாவட்ட செயலாளர் கரிகாலன், மாவட்ட பிரதிநிதிகள் பெரியராமர், ராஜபாண்டி, பொருளாளர் லட்சம் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர். தேர்தல் பிரசாரத்தில் களை கட்டாமல் இருந்த கூடலுாரில் அ.தி.மு.க., வேட்பாளர் வருகையால் நிர்வாகிகள் சுறுசுறுப்படைந்துள்ளனர்.

