/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
அ.தி.மு.க., அ.ம.மு.க., நிர்வாகிகள் 'அப்செட்' கடைசி நேர கைவிரிப்பால் அதிர்ச்சி
/
அ.தி.மு.க., அ.ம.மு.க., நிர்வாகிகள் 'அப்செட்' கடைசி நேர கைவிரிப்பால் அதிர்ச்சி
அ.தி.மு.க., அ.ம.மு.க., நிர்வாகிகள் 'அப்செட்' கடைசி நேர கைவிரிப்பால் அதிர்ச்சி
அ.தி.மு.க., அ.ம.மு.க., நிர்வாகிகள் 'அப்செட்' கடைசி நேர கைவிரிப்பால் அதிர்ச்சி
ADDED : ஏப் 18, 2024 05:53 AM
கம்பம்: கடைசி நேரத்தில் வேட்பாளர்கள் கை விரித்ததால் அ.தி.மு.க., அ.ம.மு.க., நிர்வாகிகள் அப்செட்டில் உள்ளனர். கடைசி நேர கைவிரிப்பால் வாக்காளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தேனி லோக்சபா தொகுதியில் முக்கிய மூன்று கட்சி வேட்பாளர்கள் ஒரு மாதமாக கடும் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
ஒட்டுக்களை பெற பல வழிகளில் காய் நகர்த்தியுள்ளனர்.
சமீபத்திய தேர்தல்களில் என்ன தான் பிரசாரம், ஜாதி பின்னணி, நேர்மையானவர், படித்தவர் என்றாலும், கடைசியில் பட்டுவாடா என்ற ஆயுதமே வெற்றியை தேடித் தரும் ஆயுதமாக பயன்பட்டு வருகிறது.
எனவே, தேனி தொகுதியில் மூவரும் வெயிட் டான - வேட்பாளர்கள் என்றதும், கவனிப்பு பலமாக இருக்கும் என்று நிர்வாகிகளும், வாக்காளர்களும் கணித்து இருந்தனர்.
தினகரன் தரப்பில் நான்கு இலக்கம் என தகவல் பரவியது.
இந்நிலையில் பிரசாரம் நிறைவுக்கு முன்பே ஆளும் தரப்பு மூன்று இலக்க கவனிப்பை முடித்துள்ளது. இப்போ வரும்... பிறகு வரும்.. என்று கூறிக் கொண்டிருந்த பிரதான இரு வேட்பாளர்களும் கடைசி நேரத்தில் கையை விரித்து விட்டனர்.
இது நிர்வாகிகளை பெரும் அப்செட் ஆழ்த்தியுள்ளது.
கவனிப்பு இல்லாததால் இறுதி கட்ட தேர்தல் பணிகள் முடங்கும் நிலைக்கு சென்றுள்ளது. நிர்வாகிகளை மட்டும் உற்சாகப்படுத்த வேட்பாளர்கள் தயாராகி வருவதாகவும், நாளை ஒரு நாள் தானே என்பதால் வேட்பாளர்கள் இந்த முடிவை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த கடைசி நேர திருப்பம் தேர்தலில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது தெரியவில்லை.

