/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
இரட்டை இலையால் அறிமுகமானவர்கள் இச் சின்னத்தை தோற்கடிக்க போட்டி அ.தி.மு.க., வேட்பாளர் பிரசாரம்

ADDED : ஏப் 08, 2024 04:57 AM
கடமலைக்குண்டு : இரட்டை இலையால் அறிமுகமான இருவரும் தற்போது அந்த சின்னத்தை தோற்கடிக்கும் எண்ணத்தில் களமிறங்கியுள்ளனர் என அ.தி.மு.க., வேட்பாளர் நாராயணசாமி மயிலாடும்பாறை ஒன்றிய கிராமங்களில் பிரசாரம் செய்தார்.
அ.தி.மு.க., வேட்பாளர் கண்டமனுாரில் துவங்கி கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, முத்தாலம் பாறை, உப்புத்துறை வாய்க்கால் பாறை, தங்கம்மாள்புரம், வருஷநாடு, வாலிப்பாறை உட்பட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் பிரசாரம் செய்தார். பிரசாரத்தில் அவர் பேசியதாவது: தி.மு.க., வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன், அ.ம.மு.க.,வேட்பாளர் தினகரன் இருவரும் ஒரு காலத்தில் அ.தி.மு.க.,வில் இருந்தனர். இரட்டை இலையால் மக்களிடம் அறிமுகமானவர்கள். காலக்கொடுமை இருவருமே இரட்டை இலையை தோற்கடிக்க தற்போது தேர்தலில் களம் இறங்கி உள்ளனர். இவர்கள் இரட்டை இலை சின்னத்தை முடக்க பல முயற்சிகள் மேற்கொண்டனர். இருவரையும் மக்கள் டெபாசிட் இழக்க செய்து என்னை அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும், இவ்வாறு பேசினார். பிரசாரத்தில் தேனி கிழக்கு மாவட்ட செயலாளர் ராமர், தே.மு.தி.க., மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.