/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சமுதாய தலைவர்களின் ஆதரவு திரட்டும் அ.தி.மு.க.,
/
சமுதாய தலைவர்களின் ஆதரவு திரட்டும் அ.தி.மு.க.,
ADDED : ஏப் 09, 2024 12:24 AM
போடி : போடியில் சமுதாய தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டும் பணியில் அ.தி.மு.க., வேட்பாளர் நாராயணசாமி ஈடுபட்டார்.
அ.தி.மு.க., வேட்பாளர் நாராயணசாமி போடி ஒன்றியம், தேவாரம், சின்னமனூர், தேனி, ஆண்டிபட்டி உள்ளிட்ட பகுதியில் பிரசாரம் செய்து வருகிறார்.
போடி நகர் பகுதியில் இவரது பிரச்சாரம் இன்னும் துவங்கவில்லை. இந்நிலையில் முதல் கட்டமாக நேற்று போடி நகர் பகுதியில் உள்ள சமுதாய தலைவர்களை நேரடியாக சந்தித்து ஆதரவு திரட்டும் வகையில் வீட்டிற்கும், சமுதாய கூடம் அமைந்துள்ள பகுதிக்கும் நேரடியாக சென்று சால்வை அணிவித்து ஆதரவு திரட்டினார்.
தொகுதி குறைகளை கேட்டு வெற்றி பெற்றால் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பேன் என உறுதி கூறினார். உடன் அ.தி.மு.க., நகர நிர்வாகிகள் உட்பட பலர் சென்றனர்.

