/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
அ.தி.மு.க., உறுப்பினர் அட்டை வழங்கும் விழா
/
அ.தி.மு.க., உறுப்பினர் அட்டை வழங்கும் விழா
ADDED : ஆக 21, 2024 06:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி, : ஆண்டிபட்டியில் அ.தி.மு.க., வினருக்கு உறுப்பினர் அட்டை வழங்கும் விழா திருமண மண்டபத்தில் நடந்தது. மேற்கு ஒன்றிய செயலாளர் லோகிராஜன் தலைமை வகித்தார். கிழக்கு ஒன்றிய செயலாளர் வரதராஜன் முன்னிலை வகித்தார்.
நகர் செயலாளர் அருண்மதி கணேசன் வரவேற்றார். அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் ராமர் உறுப்பினர்களுக்கு அட்டை வழங்கி பேசினார். ஜெ., பேரவை மாநில இணைச் செயலாளர் ஜெயக்குமார், மாவட்ட இணை செயலாளர் முத்துலட்சுமி உட்பட பலர் வாழ்த்தி பேசினர். மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை கழக, சார்பு அணி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.