/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
முதல்வர் ஸ்டாலின் பதவி விலக கோரி அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
/
முதல்வர் ஸ்டாலின் பதவி விலக கோரி அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
முதல்வர் ஸ்டாலின் பதவி விலக கோரி அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
முதல்வர் ஸ்டாலின் பதவி விலக கோரி அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூன் 25, 2024 12:13 AM

தேனி : தமிழகத்தில் கள்ளச்சாராய பழக்கத்தை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க., அரசை கண்டித்தும், முதல்வர் ஸ்டாலினை பதவி விலக வலியுறுத்தியும் தேனி பங்களாமேட்டில் அ.தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கிழக்கு மாவட்ட செயலாளர் ராமர் தலைமை வகித்தார். மேற்கு மாவட்ட செயலாளர் ஜக்கையன், தேனி நகர செயலாளர் கிருஷ்ணகுமார் முன்னிலை வகித்தனர்.
ஆண்டிப்பட்டி ஒன்றிய செயலாளர்கள் லோகிராஜன், வரதராஜன், நகர செயலாளர் அருண் மதிகணேசன், கூடலுார் நகர செயலாளர் அருண்குமார், பெரியகுளம் ஒன்றிய செயலாளர் அன்னபிரகாஷ், முன்னாள் எம்.பி. பார்த்தீபன், மாவட்ட அவைத்தலைவர் முருகன், இளைஞரணி, மீனவரணி, ஐ.டி., பிரிவு, எம்.ஜி.ஆர்., மன்ற நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டம் முடிந்த பின் பெண் தொண்டர் ஒருவர் ரோட்டில் உருண்டார், அங்கிருந்த கட்சியினர் அவரை சமாதானப்படுத்தி அழைத்து சென்றனர்.