/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேர்தல் பணியில் வேகம் காட்டும் அ.தி.மு.க., அ.ம.மு.க., கோஷ்டி பூசலில் தவிக்கும் தி.மு.க.,

ADDED : மார் 22, 2024 05:27 AM
கம்பம்: லோக்சபா தேர்தல் பணிகளில் அ.தி.மு.க. மற்றும் அ.ம.மு.க., பா.ஜ. கூட்டணி வேகம் காட்டி வருகிறது. ஆளும் தி.மு.க. கோஷ்டி பூசலால் அமைதியாக உள்ளது.
லோக்சபா தேர்தல் வேட்பு மனு தாக்கல் விறு விறுப்பாகி வருகிறது.- வேட்பாளர்கள் மனுத்தாக்கல் செய்து விட்டு பிரசாரம் செய்ய தயாராகி வருகின்றனர். அ.தி.மு.க. வேட்பாளர் வலையபட்டி அய்யனாரை தரிசித்து பிரசாரத்தை துவக்கி உள்ளார். மார்ச் 24 ல் தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சியம்மனை தரிசித்து டிடிவி தினகரன் துவக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தேனி தொகுதியில் பிரதான கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து விட்டதால், அந்தந்த கட்சியினர் பணிகளை துவக்கி விட்டனர்.
குறிப்பாக பா.ஜ. அ .ம.மு.க. கடந்த 10 நாட்களாக தேர்தல் ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகிறது . அ.தி.மு.க. வினர் பூத் கமிட்டி அளவில் சாதக ஓட்டுகள் பற்றி கணக் கெடுத்து வருகின்றனர். அ.தி.மு.க. வேட்பாளரும் நேற்ற அறிமுக கூட்டம் நடத்தி பிரசாரத்தை துவக்கி விட்டார். ஆனால் ஆளும் தி.மு. க. தரப்பில் எந்தவித பணிகளும் நடைபெறவில்லை. மவுனமாக உள்ளனர். மாவட்டத்தில் கோஷ்டி பூசல் உச்சத்தில் இருப்பதால், தி.மு.க. வேட்பாளர் எப்படி சமாளிக்க போகிறார் என்பது விடை தெரியாத வினாவாக உள்ளது.