/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பிரசாரத்தில் வேகம் காட்டும் அ.தி.மு.க. நிதானத்தில் தி.மு.க., அ.ம.மு.க.,
/
பிரசாரத்தில் வேகம் காட்டும் அ.தி.மு.க. நிதானத்தில் தி.மு.க., அ.ம.மு.க.,
பிரசாரத்தில் வேகம் காட்டும் அ.தி.மு.க. நிதானத்தில் தி.மு.க., அ.ம.மு.க.,
பிரசாரத்தில் வேகம் காட்டும் அ.தி.மு.க. நிதானத்தில் தி.மு.க., அ.ம.மு.க.,
ADDED : ஏப் 04, 2024 03:44 AM
கம்பம், : அ.தி.மு.க.,பிரசாரத்தில் திடீர் வேகமெடுத்து, ஊர் ஊருக்கு நிர்வாகிகள் முடுக்கி விடப்பட்டுள்ளனர். தி.மு.க. வும், அ.ம.மு.க.,வும் நிதானமாக தேர்தல் பணி மேற்கொண்டு வருகின்றன.
தேனி லோக்சபா தொகுதியில் நான்கு பிரதான கட்சி வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தி.மு.க. அ.தி.மு.க., அ.ம.மு.க.. இதையே போட்டி கடுமையாக உள்ளது. அ.ம.மு.க. தினகரன் வேட்புமனு தாக்கலுக்கு முன்னதாகவே பிரசாரத்தை துவக்கி விட்டார். ஆண்டிபட்டி பெரியகுளம், போடி, கம்பம் தொகுதிகளில் முதல் கட்ட பிரசாரத்தை முடித்து விட்டு, களத்தில் தனது மனைவியை இறக்கி விட்டு, வெளி மாவட்ட பிரசாரத்திற்கு சென்று விட்டார்.
தி.மு.க. வேட்பாளர் தாமதமாக பிரசாரத்தை துவக்கினாலும் அவரும் அனைத்து சட்டசபை தொகுதிகளிலும் முதல் ரவுண்ட் முடித்துள்ளார். அமைச்சர் உதயநிதி பிரசாரம் செய்துள்ளார்.
அ.தி.மு.க. வேட்பாளர் வேட்புமனுவை முதல் ஆளாக தாக்கல் செய்த போதும் பிரசாரத்தில் தாமதமாக இறங்கினார்.
இதனால் பிரசாரத்தில் பின் தங்கியிருந்த அ.தி.மு.க. தற்போது திடீர் வேகமெடுத்துள்ளது. நேற்று முதல் மாவட்ட செயலாளர்களும் வீதி வீதியாக பிரசாரத்தில் இறங்கியுள்ளனர். அனைத்து ஊர்களிலும் நிர்வாகிகள் வீதி வீதியாக பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அ.தி.மு.க. லின் இந்த திடீர் வேகம் பிற கட்சியினரை மிரள செய்துள்ளது. ஆனால் தி.மு.க. வும், அ.ம.மு.க. வும் ஏற்கெனவே களப்பணியில் கால் ஊன்றியுள்ளதால், மேலும் பிரசாரத்தை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளன.

