/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
அ.தி.மு.க.,வினர் நோட்டீஸ் வினியோகம்
/
அ.தி.மு.க.,வினர் நோட்டீஸ் வினியோகம்
ADDED : ஜூலை 14, 2024 03:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி, : தி.மு.க., ஆட்சியில் கடந்த 3 ஆண்டுகளில் கைப்பற்றபட்டுள்ள போதைப்பொருட்கள் பற்றியும், போதைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பொதுமக்களிடம் அ.தி.மு.க., சார்பில் நோட்டீஸ் வினியோகிக்கப்பட்டு வருகிறது.
பூதிப்புரம், வாழையாத்துப்பட்டி விலக்கு பகுதிகளில் அ.தி.மு.க., மேற்கு மாவட்ட செயலாளர் ஜக்கையன் தலைமையில் கட்சியினர் பொதுமக்களிடம் நோட்டீஸ் வினியோகித்தனர். உடன் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணைச்தலைவர் சுரேஸ்குமார், ஒன்றிய செயலாளர்கள் பாலசுப்பிரமணி, முருகன், பாண்டித்துரை, முத்துப்பாண்டி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.