/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பிரசார வாகனம் இன்றி அ.தி.மு.க., : நிர்வாகிகள், தொண்டர்கள் கலக்கம் உட்கட்சி பூசலால் தேர்தல் பணியில் தொய்வு

ADDED : ஏப் 09, 2024 12:24 AM
போடி : போடி அ.தி.மு.க., வில் உட்கட்சி பூசலால் பிரச்சார வாகனம் இன்றி பிரசாரம், ஓட்டு சேகரிப்பு, களப்பணியாற்ற முடியாமல் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
தேனி லோக்சபா தொகுதிகள் தி.மு.க., வில் தங்க தமிழ்ச்செல்வன், அ.தி.மு.க., வில் நாராயணசாமி, அ.ம.மு.க., வில் தினகரன் வேட்பாளராக உள்ளனர்.
தி.மு.க., வில் ஒரு மாதத்திற்கு முன்பே நகர், ஒன்றிய வாரியாக பூத் கமிட்டி, பொறுப்பாளர்கள் நியமனம் நடந்தது. வேட்பாளர் அறிவிக்கப்பட்டதும் செயல் வீரர்கள் கூட்டம், வார்டு தோறும் சென்று ஓட்டு சேகரிப்பில் களம் கண்டு வருகின்றனர்.
வேட்பாளர் தினகரன் ஏற்கனவே அறிமுகமானவர் என்றாலும், கட்சியில் கட்டமைப்பு, பா.ஜ., ஓ.பி.எஸ்., அணி கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்களை அரவணைத்து செல்வதில் தொய்வு ஏற்பட்டு உள்ளது. வேட்பாளர் தினகரன், அவரது மனைவி அனுராதா மக்களை கவரும் வகையில் மலரும் நினைவுகள் கூறி பிரசாரம் செய்து வருகின்றார்.
அ.தி.மு.க., வில் நாராயணசாமி போடி ஒன்றியம், சின்னமனூர், தேவாரம், தேனி உள்ளிட்ட பகுதியில் பிரசாரம் செய்து வருகிறார். ஆனால் போடியில் வேட்பாளர், கட்சியின் முக்கிய தலைவர்கள் பிரசாரம் நடைபெற வில்லை.
இதற்கு காரணம் நகர, ஒன்றிய நிர்வாகிகள் இடையே உட்கட்சி பூசலால் தேர்தல் பணியில் தொய்வு ஏற்பட்டு உள்ளது.
உட்கட்சி பூசலை சரி செய்து நேற்று போடி வந்த வேட்பாளர் நாராயணசாமி நிர்வாகிகளை சந்தித்தார். உங்களுக்குள் உள்ள விறுப்பு, வெறுப்பு மறந்து கட்சி வெற்றிக்காக பணியாற்ற வேண்டும் என சமாதானம் செய்து வைத்தார்.
பிரசார நாட்கள் குறைவாக உள்ளதால் வாகன ஏற்பாடு, கவனிப்பு இல்லாததால் ஓட்டு சேகரிப்பு, வாகன பிரசாரம் செய்ய முடியவில்லை என நிர்வாகிகள், தொண்டர்கள் வேட்பாளரிடம் முறையிட்டனர். உடனடியாக ஏற்பாடு செய்கிறேன் என கூறியவுடன் நிர்வாகிகள் முகத்தில் புன்முறுவல் ஏற்பட்டது.