/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
போதைப்பொருள் புழக்கத்தை மையப்படுத்தி அ.தி.மு.க., பிரசாரம்
/
போதைப்பொருள் புழக்கத்தை மையப்படுத்தி அ.தி.மு.க., பிரசாரம்
போதைப்பொருள் புழக்கத்தை மையப்படுத்தி அ.தி.மு.க., பிரசாரம்
போதைப்பொருள் புழக்கத்தை மையப்படுத்தி அ.தி.மு.க., பிரசாரம்
ADDED : ஏப் 01, 2024 06:40 AM
கம்பம் : போதைப்பொருள் நடமாட்டத்தை மையப்படுத்தி பிரசாரத்தில் பேச கட்சி வேட்பாளர்களுக்கும், பேச்சாளர்களுக்கும் அ.தி.மு.க. தலைமை கேட்டுக் கொண்டுள்ளது.
லோக்சபா தேர்தல் பிரசாரத்தில் தி.மு.க.வினர் பா.ஜ.க. வை அதிகம் விமர்ச்சிக்கின்றனர். அதற்கடுத்து அ.தி.மு.க. வை விமர்சித்து பேசுகிறது. அ.தி.மு.க.வை பொறுத்தவரை ஆளும் தி.மு.க. மீது கடும் விமர்சனம் செய்கின்றனர். ஆனால் பா.ஜ. வை அதிகம் விமர்சிப்பதில்லை.
தமிழகத்தில் போதைப்பொருள் விவகாரத்தில் நாட்டையே உலுக்கும் அளவிற்கு ஜாபர் என்பவரை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்து, பல பகுதிகளில் போதைப் பொருள் பறிமுதல் செய்துள்ளனர்.
பிரதமர் கடந்த முறை சென்னையில் பேசும் போது போதைப் பொருள் விவகாரம் தனது மனதை புண்படுத்துவதாக கூறி சென்றார்.
இந்நிலையில் தமிழகத்தில் போதைப் பொருள் நடமாட்டத்தை தேர்தல் பிரசாரத்தில் மையப்படுத்தி பேச அ.தி.மு.க. முடிவு செய்துள்ளது.
அ.தி.மு.க., வேட்பாளர்களுக்கும், நட்சத்திர பேச்சாளர்களுக்கும் பிரசாரத்தில் போதைப் பொருள் நடமாட்டத்தை மையப்படுத்தி பேசவும், தி.மு.க. அரசு கடும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டி பேச கேட்டுக் கொண்டுள்ளது. இதன் மூலம் ஆளும் தி.மு.க. ஆட்சி மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்படும் என்று அ.தி.மு.க. கருதுகிறது.

