நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி: போடி அருகே மணியம்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் சிவராமன் 24. இவர் 10 நாட்களுக்கு முன்பு கோவையில் உள்ள தனியார் அலைபேசி நிறுவனத்திற்கு வேலைக்கு செல்வதாக கூறி சென்றுள்ளார்.
இந்நிலையில் அந்த நிறுவனத்திற்கு வேலைக்கு செல்லவில்லை. வீட்டிற்கும் வரவில்லை. பெற்றோர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
சிவராமனின் தந்தை மணிகண்டன் புகாரில் போடி தாலுகா போலீசார் சிவராமனை தேடி வருகின்றனர்.