/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேனியில் பலத்த காற்றிற்கு விழுந்த மரங்கள் எச்சரிக்கையாக செயல்பட அறிவுறுத்தல்

ADDED : மே 29, 2024 04:47 AM

தேனி : தேனியில் இருதினங்களாக பலத்த காற்றுவீசுவதால் மரங்கள் முறிந்து விழுகின்றன. மரங்கள் மின் வயர்களில் விழுந்துதால் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என மின்வாரியம் அறிவுறுத்தி உள்ளது.
மாவட்டத்தில் பெய்த கோடை மழை சில நாட்களாக குறைந்துள்ளது. ஆனால் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுகிறது. பலத்த காற்று வீசுவதால் நேற்று மாவட்டம் முழுவதும் மதியம் பரவலாக பலத்த காற்று வீசியது. தேனியில் சில இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தது. நேற்று என்.ஆர்.டி., நகர் மின்வாரிய அலுவலகம் அருகே மரம் முறிந்து ரோட்டில் விழுந்தது. அதனை நகராட்சி பணியாளர்கள் அகற்றினர். இதுபோன்று மரங்கள், மரகிளைகள் முறிந்து விழுவது நகர்பகுதியில் தொடர்கிறது.
இது குறித்து தேனி மின்செயற்பொறியாளர் பிரகலாதன் கூறுகையில், பலத்த காற்று, மழையினால் மரங்கள், கிளைகள் முறிந்து மின்கம்பிகளில் விழுந்தால் பொதுமக்கள் நேரடியாக அகற்ற முயற்சிக்க வேண்டாம். மின்வாரிய அலுவலகத்திற்கு 94987 94987 என்ற அலைபேசி எண்ணில் தகவல் தெரிவிக்கவும். மரங்கள் முறிந்த இடத்தில் நிற்பதை தவிர்க்கவும் என்றார்.