/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
விவசாயிகள் அதிக முளைப்புத்திறன் விதைகளை பயன்படுத்த அறிவுறுத்தல்
/
விவசாயிகள் அதிக முளைப்புத்திறன் விதைகளை பயன்படுத்த அறிவுறுத்தல்
விவசாயிகள் அதிக முளைப்புத்திறன் விதைகளை பயன்படுத்த அறிவுறுத்தல்
விவசாயிகள் அதிக முளைப்புத்திறன் விதைகளை பயன்படுத்த அறிவுறுத்தல்
ADDED : ஆக 03, 2024 05:09 AM
தேனி: விவசாயிகள் அதிக முளைப்புத்திறன் உள்ள விதைகளை பயன்படுத்தி நல்ல மகசூல் பெற வேண்டும் என விதைப்பரிசோதனை அலுவலர் மகாலட்சுமி தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது: விவசாயிகள் தக்காளி, கத்தரி, மிளகாய் போன்ற காய்கறிகளை நாற்றுவிட்டும், வெண்டை, அவரை, பீன்ஸ், தட்டைபயிறு போன்றவற்றை நேரடியாக பாத்திகளில் விதைப்பு செய்து சாகுபடி செய்ய வேண்டும்.
இதற்கு நல்ல முளைப்புதிறன் கொண்ட விதைகளை விதைக்க வேண்டும்.
விதைப்பதற்கு முன் விதைகளை சூடோமோனஸ் ப்ளோரேசன்ஸ் அல்லது டிரைக்கோடர்மா விரிட மருந்துடன்( ஒரு கிலோவிற்கு 2 கிராம்) கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும். நாற்றுகளை மாலையில் நடவு செய்ய வேண்டும்.
விதை விதைப்பு, நாற்று நடவிற்கு பின் நீர் பாய்ச்சுவது அவசியம். மண்ணின் ஈரத்திற்கு ஏற்ப வாரத்திற்கு இருமுறை நீர் பாய்ச்ச வேண்டும்.
இயற்கை உரங்களை அதிகம் பயன்படுத்துவது நல்லது. காம்ப்ளக்ஸ் உரத்தினை ச.மீட்டருக்கு 40 முதல் 50 கிராம் வீதம் மேல் உரமாக இடலாம். இலைப்பேன், இலைப்புழுக்கள், வண்டுகள் ஆகியவற்றின் தாக்குதலை கட்டுப்படுத்த, வேப்ப எண்ணெய் 3 சதவீதம், வேப்பங்கொட்டைச்சாறு அல்லது அசாடிராக்டின் 1 சதவீதம் இ.சி., ஒரு லிட்டருக்கு ஒரு மில்லி என்ற விகிதத்தில் கலந்து தெளிக்க வேண்டும் என்றார்.
வேளாண் அலுவலர்கள் சத்யா, மகிஷாதேவி விதை தேர்வு குறித்து ஆலோசனை வழங்கினர்.