/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேர்தல் முன்னேற்பாடு குறித்து ஆலோசனை
/
தேர்தல் முன்னேற்பாடு குறித்து ஆலோசனை
ADDED : ஏப் 17, 2024 05:25 AM

தேனி : தேனி லோக்சபா தொகுதியில் தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் தமிழக சிறப்பு செலவின பார்வையாளர் பாலகிருஷ்ணன், தொகுதி தேர்தல்நடத்தும் அலுவலர் ஷஜீவனா தலைமையில் நடந்தது.
எஸ்.பி., சிவபிரசாத், டி.ஆர்.ஓ., ஜெயபாரதி முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தேர்தல் செலவினங்களை சமர்ப்பிக்காத வேட்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு வேட்பாளருக்கு 8 வானங்களுக்கு மட்டும் அனுமதி வழங்க வேண்டும். ஓட்டுப்பதிவு முடியும் வரை அலைபேசியில் குறுஞ்செய்தி, குரல் பதிவு அனுப்புவதை கண்காணிப்பது., இன்று மாலை 6:00 மணிக்கு மேல் பிரசாரம் செய்ய அனுமதிக்க கூடாது.
வங்கி பண பரிவர்த்தனை, யு.பி.ஐ., பரிவர்த்தனை, ரூ.10 லட்சத்திற்கு மேலான பணப்பரிவர்த்தனைகளை கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டது. செலவின பார்வையாளர்கள் தரம்வீர் தண்டி, கனிஸ்ட்யாசு, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், தேர்தல் ஒருங்கிணைப்பு அலுவலர்கள், கலெக்டர் நேர்முக உதவியாளர் ஷீலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

