/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பிரசார யுக்தியை மாற்றிய தி.மு.க., அ.தி.மு.க., -அ.ம.மு.க.-வால் சுறுசுறுப்பு

ADDED : ஏப் 16, 2024 05:03 AM
கூடலுார்: கூடலுாரில் தி.மு.க., அ.தி.மு.க.,வினர் வார்டு வாரியாக மேள தாளத்துடன் நடந்து சென்று ஓட்டு கேட்கும் பணியில் மும்முரமாகியுள்ளனர்.
கூடலுாரில் தி.மு.க., நகர செயலாளர் லோகந்துரை கட்சி நிர்வாகிகளுடன் கொட்டு மேளத்துடன் வார்டு வாரியாக வீதிகளில் ஊர்வலமாக நடந்து சென்று ஓட்டு கேட்டு வருகின்றனர்.
அதேபோல் அ.தி.மு.க., வினர் நகர செயலாளர் அருண்குமார் தலைமையில் அந்தந்த வார்டு செயலாளர்கள் மூலம் கட்சியினரை திரட்டி அனைத்து தெருக்களிலும் ஓட்டு கேட்டு வருகின்றனர்.
தி.மு.க., அதிமுக இடையே நேரடி போட்டி நிலவி வந்த நிலையில் அ.ம.மு.க.,வால் மும்மனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. வேட்பாளர் அனைத்து தெருக்களிலும் ஓட்டு கேட்டு போக வாய்ப்பு இல்லை. மேலும் அ.ம.மு.க.வினர் முக்கிய வீதிகளில் மட்டும் பிரசாரத்தை மேற்கொள்கின்றனர். இதனால் தி.மு.க., அ.தி.மு.க., வினர் பிரசார யுக்தியை மாற்றி நிர்வாகிகள் ஒருங்கிணைந்து அனைத்து தெருக்களிலும் ஓட்டு கேட்கும் வகையில் கொட்டு மேளத்துடன் உலா வருகின்றனர்.