/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வேளாண் பல்கலை சார்பில் அலைபேசி செயலி அறிமுகம்: தானியங்கி வானிலை சேவையால் விவசாயிகள் மகிழ்ச்சி
/
வேளாண் பல்கலை சார்பில் அலைபேசி செயலி அறிமுகம்: தானியங்கி வானிலை சேவையால் விவசாயிகள் மகிழ்ச்சி
வேளாண் பல்கலை சார்பில் அலைபேசி செயலி அறிமுகம்: தானியங்கி வானிலை சேவையால் விவசாயிகள் மகிழ்ச்சி
வேளாண் பல்கலை சார்பில் அலைபேசி செயலி அறிமுகம்: தானியங்கி வானிலை சேவையால் விவசாயிகள் மகிழ்ச்சி
ADDED : ஏப் 27, 2024 05:02 AM
நம் முன்னோர் வானம் பார்த்து,சூரியன், நிலவை பார்த்து வானிலையை கணித்து வேளாண் சாகுபடி செய்து வந்தனர். தற்போது காலநிலை மாற்றம், பருவம் தவறி பெய்யும் மழை, கோடைக்கு முன்பே கொளுத்தும் வெயில், மழை காலங்களில் எதிர்பார்த்த அளவை விட அதிகம் பெய்தல். இயற்கை சீற்றம் உள்ளிட்டவற்றால் பயிர் சாகுபடி முறைகளில் விவசாயிகள் புது,புது சிரமத்தை சந்திக்கின்றனர்.
பல்கலையின் செயலி அறிமுகம்:
விவசாயிகளின் சிரமத்தை தவிர்க்க கோவை வேளாண் பல்கலை, தானியங்கி வேளாண் வானிலை சேவைக்கான செயலியை உருவாக்கி, அதனை விவசாயிகளிடம் அறிமுகம் செய்துள்ளது. விவசாயிகள் கூகுள் பிளே ஸ்டோர்' சென்று, https://play.google.com/store/apps/detail?i---com.kss.tnauaas என்ற லிங்கை கிளிக் செய்து, செயலிலை ஆன்ட்ராய்டு அலைபேசியில் பயன்படுத்தி கொள்ளலாம். செயலியை ஓப்பன் செய்தவுடன் மேற்புற வலது மூலையில் உள்ள மூன்று கோடுகளை கிளிக் செய்து விவசாயிகள் தங்களின் பெயர், முகவரி, அலைபேசி எண், மற்றும் 8 இலக்க பாஸ்வேர்டை பயன்படுத்தி கொள்ள வேண்டும். பின் செயலியில் விவசாயிகள் ஓரிரு வாரங்களுக்குள் பயரிடவுள்ள பயிர் விதைப்பு தேதியை பதிவு செய்ய வேண்டும். அதன் பின் அலைபேசி செயலியில் குறுஞசெய்தியாக வேளாண் சாகுபடிக்கான வானிலை ஆலோசனை, விவசாயி வசிக்கும் பகுதி சீதோஷ்ண நிலைககு ஏற்ப ஆலோாசனைகள் வழங்கப்படும். இதனால் விதைப்பு பணி முறையாக கையாள முடியும்.
காமாட்சிபுரம் சென்டெக்ட் வேளாண் தொழில்நுட்ப ஆராய்சசி மையத்தின் தொழில்நுட்ப உதவி ஆய்வாளர் ரம்யா கூறுகையில், பல்கலை, கே.வி.கே., ஆராய்ச்சி மையத்தின் அறிவுறுத்தலின் படி இச் செயலியை விவசாயிகளிடம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். பயிர் விதைப்பு முறைகளுக்கு பேரூதவியாக இச்செயலி உள்ளது. இதனால் விவசாயிகள் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம், என்றார்.

