/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
டி.ஏ.பி., உரத்திற்கு பதில் காம்ப்ளக்ஸ் பயன்படுத்த வேளாண் துறை வேண்டுகோள்
/
டி.ஏ.பி., உரத்திற்கு பதில் காம்ப்ளக்ஸ் பயன்படுத்த வேளாண் துறை வேண்டுகோள்
டி.ஏ.பி., உரத்திற்கு பதில் காம்ப்ளக்ஸ் பயன்படுத்த வேளாண் துறை வேண்டுகோள்
டி.ஏ.பி., உரத்திற்கு பதில் காம்ப்ளக்ஸ் பயன்படுத்த வேளாண் துறை வேண்டுகோள்
ADDED : செப் 15, 2024 12:20 AM
கம்பம் : விவசாயிகள் டி.ஏ.பி. உரத்திற்கு பதிலாக காம்ப்ளக்ஸ் மற்றும் சூப்பர் பாஸ்பேட் உரங்களை பயன்படுத்தினால் நல்ல மகசூல் கிடைக்கும் என வேளான் துறை தெரிவித்துள்ளது.
கம்பம் பள்ளத்தாக்கில் இரு போக நெல் சாகுபடி, வாழை, தென்னை, திராட்சை, காய்கறி பயிர்கள், நிலக்கடலை எள்ளு உள்ளிட்ட எண்ணெய்வித்து பயிர்கள், பயறு வகைகள் சாகுபடியாகிறது. விவசாயிகள் பயிர்களுக்கு டி.ஏ.பி., உரமிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். டி.ஏ.பி., உற்பத்திக்கு தேவையான மூலப்பொருள் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதால் பல சமயங்களில் தட்டுப்பாடு ஏற்படுகிறது.
அதற்கு பதிலாக என்.பி.கே. காம்ப்ளக்ஸ் மற்றும் சூப்பர் பாஸ்பேட் உரம் இடுவதால் பயிர்கள் நன்றாக வளர்ந்து கூடுதல் மகசூல் கிடைக்கும். சூப்பர் பாஸ்பேட்டில் கந்தக சத்து இருப்பதால் பயிர்கள் வளர்ச்சி நன்றாக இருக்கும்.
வேளாண் துறையினர் கூறியதாவது: டி. ஏ.பி. யில் தழைச்சத்து 18 சதவீதம், மணிச்சத்து 46 சதவீதம் இருக்கும். ஆனால் காம்ப்ளக்ஸ் உரத்தில் தழை , மணி , மற்றும் சாம்பல் சத்துக்கள் இருக்கும். சூப்பர் பாஸ்பேட்டில் கூடுதலாக கந்தக சத்தும் உள்ளதால் பயிர்கள் நன்றாக வளர்ந்து கூடுதல் மகசூல் கிடைக்கும்.
எனவே விவசாயிகள் டி.ஏ. பி. உரத்தை மட்டுமே நம்பியிருக்காமல், அதற்கு மாற்றாக அதை விட கூடுதல் பலன்கள் தரக்கூடிய காம்ப்ளக்ஸ் மற்றும் சூப்பர் பாஸ்பேட் உரங்களை பயன்படுத்த முன்வர வேண்டும். இந்த உங்கள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கும் என தெரிவித்தனர்.