/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
இ-சேவை மையங்களில் விவசாயிகள் விபரம் பதிவேற்றம் செய்ய அனுமதி வேளாண் துறையினர் ரிலாக்ஸ்
/
இ-சேவை மையங்களில் விவசாயிகள் விபரம் பதிவேற்றம் செய்ய அனுமதி வேளாண் துறையினர் ரிலாக்ஸ்
இ-சேவை மையங்களில் விவசாயிகள் விபரம் பதிவேற்றம் செய்ய அனுமதி வேளாண் துறையினர் ரிலாக்ஸ்
இ-சேவை மையங்களில் விவசாயிகள் விபரம் பதிவேற்றம் செய்ய அனுமதி வேளாண் துறையினர் ரிலாக்ஸ்
ADDED : மார் 05, 2025 06:43 AM
கம்பம்: விவசாயிகளின் விபரங்களை இ சேவை மையங்களில் பதிவேற்றம் செய்து கொள்ள வேளாண் இயக்குநரகம் அனுமதி வழங்கியுள்ளது.
விவசாயிகளின் விபரங்கள் வேளாண் துறை மூலம் சேகரிக்கும் பணி நடக்கிறது.
இதற்கென பார்மர்ஸ் ரிஜிஸ்ட்ரி ( Farmers Registry ) என்ற செயலியில் , மாநிலத்தில் உள்ள அனைத்து விவசாயிகளின் விபரங்களையும் பதிவேற்றம் செய்யவும், அதன்பின் ஒவ்வொரு விவசாயிக்கும் பிரத்யேக எண் வழங்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கென மாநில வேளாண் ஆணையரகம் நடவடிக்கைகளை கடந்த மாதம் துவங்கியது. விவசாயிகளின் விபரங்களை பெறுவதற்கான சிறப்பு முகாம்கள் ஒவ்வொரு கிராமத்திலும் ஜன . 2 முதல் நடைபெற்று வருகிறது.
உதவி வேளாண் இயக்குநர்கள் மேற்பார்வையில் வேளாண் உதவி அலுவலர்கள், ஊராட்சிகளில் திட்டப் பணி ஒருங்கிணைப்பாளர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பதிவேற்றம் செய்வதில் பல பிரச்னைகள் ஏற்படுவதாகவும், ஒவ்வொரு விவசாயின் விபரங்களை பதிவேற்றம் செய்யும் போது 3 முறை 'ஓடிபி' எண்களை பெற வேண்டியுள்ளதாகவும் அதிகாரிகள் புலம்பினர்.
இந்நிலையில் வேளாண் துறையினரின் நடைமுறை சிரமங்களை உணர்ந்த இயக்குநரகம், தற்போது இ சேவை மையங்களிலும் பதிவேற்றம் செய்ய அனுமதி வழங்கி உள்ளது. மேலும் விவசாயிகள் அவரவர் அலைபேசியில் அவர்களாக பதிவேற்றம் செய்யும் வகையில் செயலி உருவாக்கப் பட்டுள்ளதாகவும், அது விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேளாண் இயக்குநரகத்தின் இந்த நடவடிக்கையை வேளாண் துறையினர் வரவேற்றுள்ளனர்.இத் திட்டத்தின் மூலம் ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பிரத்யேக எண் அடையாள அட்டையுடன் வழங்கப்படும். விவசாயிகள் வங்கி கடன்கள், அரசின் நலத்திட்டங்கள், மானியங்கள் போன்றவைகள் பெறுவதற்கு இந்த எண்ணை பயன்படுத்தி கொள்ளலாம் என்று வேளாண் அதிகாரிகள் கூறியுள்ளனர்.