/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வேளாண் மாணவிகள் விவசாயிகளுடன் சந்திப்பு
/
வேளாண் மாணவிகள் விவசாயிகளுடன் சந்திப்பு
ADDED : ஏப் 27, 2024 05:11 AM
தேனி: மதுரை வேளாண் கல்லுாரி இறுதியாண்டு மாணவிகள் கிராமபுற வேளாண் பணி அனுபவ திட்ட முகாம் தேனி அருகே உள்ள உப்பார்பட்டியில் நடந்தது.
இங்குள்ள விவசாயிகளுக்கு இயற்கை விவசாயம் குறித்த ஆலோசனை வழங்கினார். கூட்டத்தில் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கி பேசிய மாணவி சந்தோஷினி,' இயற்கை வேளாண்மையால் சுற்றுச்சூழல், மண் வளம் பாதுகாக்கப்படுவது பற்றியும், அதன் பயன்கள், மண்ணின் தரத்தை எவ்வாறு மேம்படுத்துவது' குறித்து விளக்கம் அளித்தார்.
மேலும் இயற்கை வேளாண் பொருட்கள் சந்தையின் தேவைகள், இயற்கை விவசாயத்தால் விளைந்த பொருட்களில் நிறைந்துள்ள சத்துக்கள், அதனை உட்கொள்வதால் ஏற்படும் நன்மை பற்றி விளக்கினார். கிராம விவசாயிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

